தமிழகம்

ஸ்டாப் ஸ்டாப்.. தனியார் பேருந்தை வழிமறித்து ரவுடிகள் செய்த அட்டகாசம்..இதுதான் காரணமா!!

Summary:

ஸ்டாப் ஸ்டாப்.. தனியார் பேருந்தை வழிமறித்து ரவுடிகள் செய்த அட்டகாசம்..இதுதான் காரணமா!!

புதுசேரியிலிருந்து கடலூர் நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ‌ஸ்ரீ லட்சுமி என்ற தனியார் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை 3 ரவுடிகள் சேர்ந்து தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

‌ஸ்ரீ லட்சுமி என்ற தனியார் பேருந்து பெரியக்காட்டுபாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென ரவுடிகள் 3 பேர் பஸ்ஸை வழிமறித்துள்ளனர். பின் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை அரிவாளைக் கொண்டு அடித்து நொறுக்கியுள்ளனர். அதில் ஓட்டுனருக்கு அரிவாளால் வெட்டு ஏற்பட்டு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் அனைத்து பேருந்தின் உள்ளே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியதை அடுத்து போலீசார் அந்த 3 ரவுடிகளையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் தங்களது பகுதியில் பேருந்து நிற்காமல் சென்றதால் கூட்டாளிகளுடன் வந்து கண்ணாடியை உடைத்ததாக கூறியுள்ளனர்.


Advertisement