மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
முன்பகை காரணமாக 15 வயது சிறுமியை இப்படியா செய்வது! விழுப்புரத்தில் அரங்கேறிய கொடூர சம்பவம்!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒரு கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை கட்டிப்போட்டு தீ வைத்து கொளுத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால். இவரது 15 வயது மகள் ஜெயஸ்ரீ பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று ஜெயஸ்ரீ மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
திடீரென அவர்களது வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று பார்த்த போது ஜெயஸ்ரீ உடலில் நெருப்புடன் எரிந்து கொண்டு இருந்துள்ளார். உடனே அவரை மீட்ட உறவினர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அதனை தொடர்ந்து திருவெண்ணெய்நல்லூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் முருகன், கலியபெருமாள் ஆகி இருவரும் தன்னை கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாக ஜெயஸ்ரீ வாக்குமூலம் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து முருகன், கலியபெருமாள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து ஜெயஸ்ரீ தந்தை ஜெயபால் கூறுகையில், "எங்களுக்கும் அவர்களுக்கும் ஏற்கனவே முன்பகை உள்ளது. அவர்கள் என் மகனை தாக்கியதால் அவர்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றேன். அந்த ஆத்திரத்தில் தான் அவர்கள் இப்படி செய்துவிட்டார்கள்" என கூறியுள்ளார்.