பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திரும்ப கொடுக்கப்படுகிறது! வாகனத்தை பெறுவதற்கு என்ன கொண்டு வரவேண்டும்?

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திரும்ப கொடுக்கப்படுகிறது! வாகனத்தை பெறுவதற்கு என்ன கொண்டு வரவேண்டும்?



144 time vehicle will be returned

உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனாவால் நாடுமுழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் அதிகரிக்கத் தொடங்கியதால் பிரதமர் மோடி ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை இந்தியாவில் அமல் படுத்தி இருந்தார். ஆனாலும், இந்தியாவில் கொரோனா பரவல் சற்று அதிகரித்த நிலையில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு இந்தியாமுழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வரத் தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை 1,79,827 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வீணாக போவதற்கு வாய்ப்பு உண்டு என்பதற்காக, அவற்றை விடுவிக்க வேண்டுமென்று பல அரசியல் தலைவர்கள்கோரிக்கை வைத்திருந்தனர்.

144

இந்நிலையில் இன்று காலை அனைத்துக் காவல் நிலையங்களுக்கும், இது தொடர்பாக தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், தமிழகத்தில் ஊரடங்கு அமுல்படுத்திய திலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். வாகன உரிமையாளர்கள் தினசரி காலை 7 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒருமுறை, 10 நபர்களுக்கு என்ற முறை கடைப்பிடிக்கப்பட்டு வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் என்றும், பகல் 1 மணி வரை மட்டுமே வாகனங்கள் திரும்பி ஒப்படைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

காவல் நிலையத்தில் வாகனங்களை வாங்கும் நேரத்தில் கண்டிப்பாக, சமூக இடைவேளி கடைப்பிடிக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அந்தந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வழங்கப்படும் என்றும், வாகனத்தை திரும்பி வாங்க வரும் பொழுது பதிவு செய்யப்பட்டதற்கான எஃப்.ஐ.ஆர் நகல், ஒரிஜினல் ஓட்டுனர் உரிமம் மற்றும் வண்டியின் ஆர்சி புத்தகம் ஆகியவற்றை கண்டிப்பாக எடுத்து வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.