36 கிலோமீட்டர்..! அருகே ஆம்புலன்ஸ், சில இளைஞர்கள்..! இப்படியொரு பயணமா.? சாதனை படைத்த பள்ளி மாணவி...!

36 கிலோமீட்டர்..! அருகே ஆம்புலன்ஸ், சில இளைஞர்கள்..! இப்படியொரு பயணமா.? சாதனை படைத்த பள்ளி மாணவி...!



13 years old girl ride by cycle by closing eyes

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள முனுகபட்டு என்னும் கிராமத்தை சேர்ந்தவர் குமார். நெசவு தொழிலாளியான இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு 13 வயதில் ஸ்ருதி என்ற மகள் உள்ளார். ஸ்ருதி முனுகப்பட்டு அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் கண்களை கட்டிக்கொண்டு ஓவியம் வரைதல், சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட சாதனைகளை செய்து அசதிவருகிறார் மாணவி ஸ்ருதி. குடியரசு தினத்தை முன்னிட்டு சாதனை படைக்க எண்ணிய ஸ்ருதி அதன்படி தனது கண்களை கட்டிக்கொண்டு 36 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டியுள்ளார்.

தான் படிக்கும் பள்ளியிலிருந்து ஆரணி- வந்தவாசி சாலையில் வந்தவாசி வரை கண்களை மூடிக்கொண்டு சைக்கிளில் சென்ற ஸ்ருதி திரும்பவும் பள்ளிக்கு சைக்கிளில் திரும்பியுள்ளார். மாணவிக்கு துணையாக ஒரு ஆம்புலன்ஸ் வாகனமும் தன்னார்வ இளைஞர்கள் சிலரும் துணைக்கு சென்றுள்ளனர். இந்த சாதனையை திருவண்ணாமலை கலாம் உலக பதிவு பவுண்டேசன் என்ற நிறுவனம் பதிவு செய்தது.

இதற்கு முன்னர் 33 கிலோமீட்டர் கண்களை கட்டிக்கொண்டு ஸ்ருதி சைக்கிள் ஒட்டி சாதனை படைத்திருந்தார். தற்போது 36 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டி தனது சாதனையை தானே முறியடித்துள்ளார் ஸ்ருதி. மாணவி ஸ்ருதியின் இந்த அபார சாதனைக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.