பாலியல் துன்புறுத்தல்., இன்ஸ்டாகிராமில் வாழைப்பழ பேச்சு.. ஆசை வார்த்தையில் மயங்கிய மாணவி..! அடுத்து நடந்த பயங்கரம்.!!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய வாலிபர், மாணவியை திருமணம் செய்து பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் மாணவி பெற்றோருக்கு தெரிவிக்கவே, வாலிபர் போக்சோ சட்டத்தில் கைதானதை விளக்குகிறது இந்த செய்திக்குறிப்பு.
கோவை மாவட்டத்தில் உள்ள நெகமம் பகுதியைச் சார்ந்த 17 வயது மாணவி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். மாணவிக்கு கடந்த 6 மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டியூரை சார்ந்த அரவிந்தன் என்ற 23 வயதான இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது இவர்களுக்குள் காதலாக மாறியதாக தெரியவரும் நிலையில், இருவரும் அவ்வப்போது செல்போனில் கொஞ்சிக்குலாவி தங்களின் காதலை வளர்த்து வந்துள்ளனர். கோயம்புத்தூருக்கு வருகைதந்த அரவிந்தன் மாணவிக்கு திருமண ஆசை காட்டி கடந்த 6-ஆம் தேதி வாணியம்பாடியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கியிருந்த நிலையில், அங்கு வைத்து சிறுமியை பாலியல் ரீதியாக பலமுறை நெருங்கியதாக தெரியவருகிறது. இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கண்ணீருடன் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவே, உடனடியாக அங்கு வந்த மாணவியின் பெற்றோர் அவரை மீட்டு நெகமம் காவல் நிலையத்திற்கு சென்றனர்.
மேலும் அரவிந்தனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெற்றோரின் புகாரை ஏற்றுக்கொண்டு, 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த அரவிந்தனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.