தமிழகம்

ஆகஸ்ட் 10 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடல்..

Summary:

10th August realise 10th exam results

இந்தியாவில் கொரோனா வைரஸானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இன்று வரை திறக்கப்படாமல் இருந்து வருகிறது.

தமிழகத்தில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களை தவிர மற்ற ஆண்டு மாணவர்களுக்கு அனைத்து தேர்வுகளும் ரத்து செய்வதாக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின.

ஆனால் தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வானது கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தால் நடத்தப்படாமலே தமிழக அரசு ரத்து செய்துள்ளது. அதனடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குவது குறித்து கல்வியாளர்கள் மேல்மட்ட குழு ஆலோசனைப்படி மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் மற்றும் வருகைப்பதிவு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று அரசு தேர்வுகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி 10ஆம் வகுப்பு தேர்வு முடிகள் வெளியாகும் என தெரிவித்துள்ளது . மேலும் மாணவர்கள் பதிவு செய்திருந்த அலைபேசியில் குறுந்தகவல் வாயிலாகவும், tnresults.nic.in மற்றும் dg1.tn.nic.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் மதிப்பெண்களில் ஏதேனும் குளறுபடி என்றால் மாணவர்கள் பயின்ற பள்ளியில் தலையாசிரியர் வாயிலாக 17ஆம் தேதி முதல் 25தேதி வரை விண்ணபிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.


Advertisement