வீட்டு வேலை செய்ய தாய் வற்புறுத்தியதால் 10 ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு... போலீசார் விசாரணை!!

திருவள்ளுவர் மாவட்டம் பேரம்பாக்கம் என்ற ஊரின் அருகே உள்ள புதுப்பட்டு கிராமம் புதிய காலனியில் வசித்து வருபவர் சபாபதி - கவியரசி தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். மூவரும் அருகே உள்ள பள்ளி ஒன்றில் பயின்று வந்துள்ளனர். தாய் மற்றும் தந்தை இருவரும் வேலைக்கு சென்று வருவதால் கவியரசி தனது பிள்ளைகளிடம் வீட்டு வேலைகளை செய்து தருமாறு கூறி வந்துள்ளார்.
அதன்படி கடந்த 4 ஆம் தேதி சபாபதி வேலை காரணமாக அலுவலகத்திலேயே தங்கியுள்ளார். அடுத்த நாள் கவியரசி இன்று வீட்டில் கூழ் ஊற்ற வேண்டும் எனவே மாலை பள்ளி முடிந்து வந்து வீட்டை சுத்தம் செய்யுமாறு தனது பிள்ளைகளிடம் கூறி விட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய மூவரும் வீட்டை சுத்தம் செய்ய முயன்றுள்ளனர். அப்போது மாணவி தனது அண்ணன் மற்றும் தம்பியிடம் நீங்கள் விளையாட செல்லுங்கள் நான் வீட்டை சுத்தம் செய்கிறேன் என்று கூறி அனுப்பியுள்ளார். அவர்கள் சென்றதும் வீட்டை உள்பக்கமாக தாப்பால் போட்டு வீட்டு மின்விசிறியின் கம்பியில் சேலையை கட்டி தூக்கு போட்டு கொண்டு தற்கொலை செய்துள்ளார்.
விளையாட சென்ற விட்டு வீடு திரும்பிய இருவரும் மாணவி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்து கத்தி கூச்சலிட்டுள்ளனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடு வந்து மாணவியின் உடலை கீழே இறக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடிக்கடி தாய் வீட்டு வேலை செய்யுமாறு கூறி வந்ததால் மாணவி தூக்கில் தொங்கி சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.