Spiritual Tips: தெய்வீக சக்தி வீட்டில் அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்.. கட்டாயம் இதை பண்ணிடுங்க.!
வீட்டில் தெய்வங்கள் சக்தி அதிகரிக்க இதனை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் அனுதினம் சந்திக்கும் சண்டை, நோய்கள், பணரீதியிலான நஷ்டத்துக்கு நேர்மறை சக்தியும் காரணமாக இருக்கலாம் என்பது ஆன்மீகத்தின் நம்பிக்கை. இந்த விஷயங்களை பற்றி கவலைப்படாமல், வீட்டில் தெய்வ நம்பிக்கையை வலுப்படுத்த சில எளிய முறைகள் இருக்கின்றன. இதனால் தெய்வத்தின் அருள் கிடைத்து நமது வாழ்க்கை செழிக்கும்.
வீட்டை சுத்தம் செய்யுங்கள்:
ஒவ்வொரு வீட்டிலும் இறைசக்தி நிலைத்திருக்க பெண்களின் பங்கு அவசியமானது. நாம் இருக்கும் இடத்தில் மாற்றங்கள் உண்டாக, மாற்றத்தை வீட்டில் இருந்து நாம் தொடங்க வேண்டும். வீட்டினை நாம் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமான ஒன்றாகும். பல ஆண்டுகளாய் தேவையின்றி வைத்திருக்கும் பழைய பொருட்கள், உடைகள், காகிதங்களை அகற்ற வேண்டும். இதனால் அழுத்த உணர்வு மாற்றம் அடையும், இருள் மனநிலை மாறும், அமைதியான சூழல் உண்டாகும். மகாலட்சுமி வாசம் செய்யும் வீடு சுத்தத்துடன் இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: அசைவம் சாப்பிட்ட பின் விளக்கேற்றி பூஜை செய்யலாமா?.. கவனிக்க வேண்டியவை.!

முருகன் & மகாலட்சுமி பூஜை:
தினம் காலை மற்றும் மாலை வேளைகளில் விளக்கேற்றுவது நல்லது. எந்த நேரமும் பூஜை செய்வது இயலாதது எனினும், காலை மற்றும் மாலை வேளைகளில் இறைவனை நினைத்து வழிபடுவது நல்லது. இதனால் வீட்டில் தெய்வத்தன்மை உண்டாகும். வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமியை நினைத்து பூஜை செய்வது, செவ்வாயில் முருகனை நினைத்து வேல் பூஜை செய்வது நல்லது. வீட்டிலேயே மாதம் ஒருமுறை சிறிய பூஜைகளும் செய்யலாம்.
இதையும் படிங்க: குலதெய்வத்தை வீட்டில் வணங்குவது எப்படி?.. ஆன்மீக பக்தர்களே தெரிஞ்சிக்கோங்க.!