குலதெய்வத்தை வீட்டில் வணங்குவது எப்படி?.. ஆன்மீக பக்தர்களே தெரிஞ்சிக்கோங்க.!



How to Worship Your Kuladeivam at Home Rituals & Weekly Pooja Guidelines

குலதெய்வத்தை வீட்டில் எப்படி வணங்க வேண்டும்? என்பது தொடர்பான தகவல்களை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

இந்து மதத்தில் பல கடவுள்கள் இருந்தாலும் முழு முதல் கடவுளாக நாம் வணங்க வேண்டியது விநாயகர் மற்றும் நமது குலதெய்வம் ஆகியவை தான். இவர்களை வணங்கிய பின்னரே பிற தெய்வங்களை வணங்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை அல்லது ஆறு மாதத்துக்கு ஒருமுறை குலதெய்வ கோயிலுக்கு கட்டாயம் சென்று வழிபடுவது கூடுதல் நன்மையை வழங்கும். 

குலதெய்வ வழிபாடு:

குலதெய்வத்தை வீட்டில் வணங்கலாமா? என்ற சந்தேகங்களும் மக்களுக்கு இருக்கின்றன. குலதெய்வத்தை வீட்டிலும் வணங்கலாம். மண் குடுவையில் தீபம் ஏற்றி குலதெய்வத்தை அழைத்து வழிபாடு செய்ய வேண்டும். மண் குடுவையையும், விளக்கையும் நீரில் சுத்தம் செய்து துடைத்த பின் மஞ்சள் பூசி குடும்ப வழக்கபடி வழிபாடு செய்யலாம். 

இதையும் படிங்க: அசைவம் சாப்பிட்ட பின் விளக்கேற்றி பூஜை செய்யலாமா?.. கவனிக்க வேண்டியவை.!

Kuladeivam

தீபம் ஏற்றி பூஜை:

வாரம் ஒரு முறை குலதெய்வத்தை நினைத்து வழிபடுவது நல்லது. சனிக்கிழமை காலை வேளையில் குலதெய்வத்தை நினைத்து தீபம் ஏற்ற நினைத்தது நடக்கும். அதேபோல மண் குடுவையை செம்பு அல்லது பித்தளை தட்டில் வைத்து மலர்களால் அலங்கரிக்கலாம். குடுவைக்குள் போடும் தவிடு, விளக்கு இரண்டையும் ஆண்டிற்கு ஒரு முறை மாற்றுவது நல்லது.