அசைவம் சாப்பிட்ட பின் விளக்கேற்றி பூஜை செய்யலாமா?.. கவனிக்க வேண்டியவை.!



light Agal Vilakku or Puja After Eating Non-Veg? Clear Guidance 

அசைவ உணவுக்குப் பிறகு வீட்டில் தீபம் ஏற்றலாமா? எந்த சூழ்நிலையில் விளக்கேற்றுவது உகந்தது? என்பது தொடர்பான தகவல்களை இந்தப்பதிவில் காணலாம்.

ஒவ்வொருவரின் வீட்டிலும் தினமும் விளக்கேற்றும் பழக்கம் என்பது இருக்கும். விளக்கேற்றுவது கடவுளை வணங்குவதற்கு மட்டுமல்லாமல் மன நிம்மதி அடையவும், தீய எண்ணங்கள் மனதில் இருந்து வெளியேறவும் உதவும். ஆனால் எப்போதெல்லாம் விளக்கேற்ற வேண்டும்? எந்த சூழ்நிலையில் விளக்கேற்றுவதை தவிர்க்க வேண்டும்? என்ற குழப்பமானது தற்போது வரை பலருக்கும் இருந்து வருகிறது. 

பூஜை செய்வதில் குழப்பம்:

அதுபோல அசைவம் சாப்பிட்டுவிட்டு விளக்கு ஏற்றலாமா? கோவிலுக்கு அசைவம் சாப்பிட்டுவிட்டு செல்லலாமா? என பலவிதமான சந்தேகங்களும் இருக்கின்றன. இதன் காரணமாக அசைவம் சமைக்கும் நாட்களில் தங்களது வீட்டில் பூஜை செய்யும் இடங்களை முழுவதுமாக பூட்டி வைத்து விளக்கேற்றுவதை தவிர்ப்பர். ஆன்மீக தகவலின் படி, வீட்டில் விளக்கேற்றாமல் இருப்பது எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் எண்ணங்கள் அதிகரிக்க வழிவகை செய்யும். 

அசைவம்

அசைவம் சாப்பிட்டு விளக்கு ஏற்றலாமா?

அசைவம் சாப்பிடும் பட்சத்தில் குளித்துவிட்டு விளக்கேற்றி பூஜை செய்யலாம். இதன் மூலம் எந்த ஒரு தோஷமும் ஏற்படாது. குளிப்பதன் மூலம் உடல் மற்றும் மனம் முழுவதுமாக சுத்தமாகிறது. இதன் பின்னர் நாம் பூஜை அறையில் விளக்கேற்றி பூஜை செய்யலாம். விளக்கேற்றிவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தால் கூட தீய எண்ணங்கள் நம் மனதை விட்டு செல்லும். 

கவனிக்க வேண்டியவை:

அதே சமயத்தில் அசைவ உணவின் வாசனை வீட்டில் இருக்கும் போது விளக்கேற்றக்கூடாது. சாப்பிட்டுவிட்டு குளித்து பிறகு விளக்கு ஏற்றலாம். நாம் பூஜை அறையில் விளக்கேற்றி பூஜை செய்வது தெய்வீகத் தன்மைக்காக மட்டுமல்ல. நமது மனதில் புனித தன்மைக்காகவும் தான். அந்த விஷயத்தை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.