சற்றுமுன்.... ஜனநாயகன் ரிலீஸ் தேதி வந்தாச்சு! குஷியில் குத்தாட்டம் போடும் ரசிகர்கள் கூட்டம் !!!
Sevvai Peyarchi: இந்த 3 ராசிகளுக்கு நல்லகாலம் பிறக்குது.. இடம்பெயரும் செவ்வாய்.!
தன்னம்பிக்கை, புதிய பொறுப்புகளை தேடித் தரும் செவ்வாய் கிரகப்பெயர்ச்சி ரிஷபம், தனுசு, கும்பம் ராசிகளுக்கு நல்ல காலமாக அமையவுள்ளது.
செவ்வாய் கிரகம் பிப்ரவரி 23ம் தேதி கும்ப ராசிக்கு இடம்பெயர்கிறது. இந்த கிரகப்பெயர்ச்சி காரணமாக 3 ராசிக்காரர்களுக்கு பொற்காலம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தொழில் முன்னேற்றம், பண ஆதாயம், புதிய பொறுப்புகள், தன்னம்பிக்கை அதிகரித்தல் போன்ற சிறப்பு பலன்கள் கிடைக்கும் என ஜோதிடம் சொல்கிறது.
வீரத்தின் அதிபதி:
ஜோதிடத்தில் செவ்வாய் தைரியம், துணிச்சல், வீரம், செல்வம், கோபத்துக்கு அதிபதி ஆவார். செவ்வாய் தனது பாதையினை மாற்றிக்கொள்ளும்போது, இந்த விஷயங்களில் மனிதர்களிடமும் மாற்றம் உண்டாகும். தற்போது பிப்ரவரி 23ம் தேதி செவ்வாய் கும்ப ராசியில் நுழைகிறார். இந்த விஷயம் 12 ராசிகளையும் பாதிக்கும் என்றாலும், 3 ராசிகளுக்கு நல்லகாலம் பிறக்கிறது.
இதையும் படிங்க: சனி பகவானின் சர்ப்ரைஸ்.. 3 ராசிகளுக்கு ஜாக்பாட்.. உங்க ராசியும் உள்ளதா?.!
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கர்ம வீடு என அழைக்கப்படும் 10ம் இடத்தில் சஞ்சரிக்கவுள்ளார். இதனால் தொழில் ரீதியாக பணியாளர்களுக்கு பதவி உயர்வு, பொறுப்பு உயர்வு கிடைக்கும். நீண்ட காலமாக ஒரே இடத்தல் வேலை பார்த்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். முன்னோர்களின் சொத்துக்களில் இருந்து நன்மை கிடைக்கலாம். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் மாற்றம் துணிச்சல், தைரியத்தை அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் முடிவுகளை எளிதில் எடுக்கலாம். புதிய வருவாய் ஆதாரங்கள் கிடைக்கும். எங்காவது பணம் சிக்கிக்கொண்டால், அதனை மீட்கும் வழிமுறைகள் கிடைக்கும். வெளிநாட்டு பயணம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
கும்பம்:
செவ்வாய் தனது சொந்த ராசியான லக்கினத்தில் சஞ்சரிக்கவுள்ளதால், இது பயனுள்ள மாற்றமாக இருக்கும். பணி நடையில் மேம்பாடு, தலைமைத்துவ திறனுக்கு பாராட்டு என வெற்றிகள் கிடைக்கும். திடீர் பண வரவு கிடைக்கும். முதலீடுகள் வருமானத்தை தரும். திருமண வாழ்க்கையில் துணையின் ஆதரவு கிடைக்கும். உறவுகள் மேம்படும்.
செவ்வாய்கிழமை அனுமனை வழங்கி, பருப்பு தானம் செய்வது நல்லது. ஏழை மக்களுக்கு உதவலாம்.