பெண்கள் வெள்ளி மூக்குத்தி அணிவதால் கிடைக்கும் ஆன்மீக பலன்கள் ஏராளம்! அவசியம் தெரிஞ்சுக்கோங்க....



benefits-of-wearing-silver-nose-ring-for-women

பெண்கள் வெள்ளி மூக்குத்தி அணிவதின் முக்கிய நன்மைகள்

மூக்குத்தி என்பது பெண்கள் அணியும் ஒரு பாரம்பரிய அணிகலன் ஆகும். முக அழகை உயர்த்துவதுடன், ஆன்மீக ரீதியாக பல நன்மைகளும் கொண்டுள்ளது. குறிப்பாக, வெள்ளி மூக்குத்தி அணிவதால் பல நன்மைகள் உள்ளன என்று நம்பப்படுகிறது.

வெள்ளி மூக்குத்தியின் ஆன்மீக பலன்கள்

வெள்ளியில் செய்யப்பட்ட மூக்குத்தி அணிவதன் மூலம் நேர்மறை ஆற்றல் உடலுக்கு சுற்றி பரவுகிறது. இது தீய சக்திகள், கெட்ட கண்கள் மற்றும் எதிர்மறை விசைகள் இருந்து பாதுகாப்பளிக்கின்றது.

வெள்ளி மூக்குத்தி

சந்திரனை வலுப்படுத்தும் வெள்ளி

வெள்ளி, சந்திரனை பலப்படுத்தும் தன்மையுடையது. மூக்குத்தி வடிவில் இதனை அணிவதால், மனஅமைதி மற்றும் உணர்ச்சி நிலை நிலைத்துவைக்கும் என்று நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: சனியின் வக்ர பெயர்ச்சியால் இந்த 5 ராசியினருக்கு 139 நாட்கள் சோதனை காலம்! கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் யார் தெரியுமா?

வீட்டு சூழலை அமைதியாக வைத்திருக்கும் சக்தி

வீட்டில் அமைதி, பாசம் மற்றும் நல்லிணக்கம் நிலவ, வெள்ளி மூக்குத்தி உதவுகிறது. இதன் காரணமாக குடும்ப உறவுகள் வலுப்பெறும்.

திருமண வாழ்க்கையை செழிக்க வைக்கும்

திருமண வாழ்கையில் மகிழ்ச்சியையும், மனநிறைவை அதிகரிக்கும் சக்தி வெள்ளி மூக்குத்திக்கு உள்ளது. திருமண தடை போன்ற பிரச்சனைகளை நீக்கும் ஆற்றலும் இதற்கு உள்ளது.

லட்சுமி தேவியின் அருள் பெற

வெள்ளியானது லட்சுமி தேவிக்கு விருப்பமானதாக நம்பப்படுகிறது. வெள்ளி மூக்குத்தி அணிவதால், வீட்டிற்கு செழிப்பு, வளம், சுபீட்சம் வருவதாகவும் நம்பப்படுகின்றது.

சுக்கிரனுக்கும் பலம் சேர்க்கும்

சந்திரனோடு சேர்த்து சுக்கிரனையும் பலப்படுத்தும் சக்தி வெள்ளிக்குள்ளது. இது பெண்களின் அழகு, ஆரோக்கியம் மற்றும் குடும்ப வளம் மேம்பட உதவுகிறது.

 

இதையும் படிங்க: vastu tips: வீட்டில் செல்வம் குவியணுமா? ரோஜா பூவை வைத்து இதெல்லாம் செய்யணுமாம்! பார்த்து பயன்பெறுங்கள்...