ஒரே நொடி.. சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்த உதயம் திரையரங்கம்; நெஞ்சை ரணமாக்கும் காட்சிகள்.!
திருமணத்திற்கு பின், கொடி கட்டி பறக்கும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்.! உங்க ராசியும் இருக்கா.?!

ஜோதிட ரீதியாக ஒருவர் பிறக்கின்ற ராசி, நட்சத்திரம் ஆகியவை அவரது எதிர்கால வாழ்க்கையுடன் மிக தொடர்பு கொண்டதாக கருதப்படுகிறது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த ஆண்களுக்கு திருமணத்திற்கு பின்னர், வாழ்க்கையில் நன்மைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அந்த ராசிகள் எவை என்று பார்க்கலாம்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் லட்சியவாதிகளாக இருப்பார்கள். ஆனால், இவர்களிடம் பிடிவாத குணம் அதிகமாக காணப்படும். வாழ்வில் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக அவர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள். இந்த மாதிரியான குணத்தை கொண்ட நபர்கள் திருமணத்திற்கு பின் அதீத பொறுப்புணர்வு ஏற்பட்டு விரைவில் அதிக பணம் சம்பாதித்து நல்ல நிலைக்கு வந்து வெற்றியை பெறுவார்கள்.
இதையும் படிங்க: இந்த ராசிகளுக்கு ஈஸியா இரண்டாவது திருமணம் நடக்குமாம்.! உங்கள் துணையின் ராசி இதுவா.?!
துலா ராசி
துலா ராசியில் பிறந்த ஆண்கள் பொதுவாக ராஜதந்திர ஆளுமையை கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு இயல்பாகவே வசீகர தோற்றமும் இருக்கும். திருமண வாழ்க்கையில் இவர்கள் மிகுந்த ஈடுபாடுடன் இருப்பார்கள். மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். மனைவியையும் அவர் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள நினைப்பார். இதனால், இவர்களது வாழ்க்கையில் பணவரவு திருமணத்திற்கு பின் மிகவும் அட்டகாசமாக இருக்கும். எனவே, இவர்கள் திருமணத்திற்கு பின் பிரகாசமான வாழ்க்கையை பெறுவார்கள்.
கன்னி ராசி
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு விசுவாசம் மற்றும் புத்தி கூர்மை இயல்பிலேயே அதிகம். மேலும், வியாபாரம் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இவர்கள் கில்லாடிகளாக இருப்பார்கள். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற உந்துதலின் காரணமாக இவர்கள் வாழ்க்கையில் வெகு சீக்கிரம் முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷப ராசி
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் சாதாரணமாகவே பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்த விஷயத்தையும் நேர்மையாக செய்ய வேண்டும் என்று நினைத்து அதற்காக கடின உழைப்பையும் போடுவார்கள். இவர்களது புத்திசாலித்தனம், நேர்மை தன்மை உள்ளிட்டவை திருமண வாழ்க்கையை மகிழ்ச்சி நிறைந்ததாக வைத்திருக்கும். சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் திருமணத்திற்கு பின் நிதி ரீதியாக நல்ல வளர்ச்சி அடைவார்கள். இதன் காரணமாக, அவர்களது திருமண வாழ்க்கையும் சந்தோஷமாக இருக்கும்.
இதையும் படிங்க: இந்த 3 ராசிக்கு.. 2025-ல் சொர்க்க வாழ்க்கை ஆரம்பம்.. இனி எல்லாமே வெற்றிதான்.!