புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
இந்த ராசிகளுக்கு ஈஸியா இரண்டாவது திருமணம் நடக்குமாம்.! உங்கள் துணையின் ராசி இதுவா.?!
நம் வாழ்க்கையில் திருமணம் குறித்த தனித்துவமான பல்வேறு தகவல்களை ஜோதிடங்கள் வழங்குகின்றன. ஒரு சில ராசிகள் நீண்ட கால திருமண உறவுக்கு பெயர் பெற்றது. ஆனால், ஜோதிட ரீதியாகவே சில ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.
துலாம்
: இவர்கள் திருமண உறவுக்கு இடையில் சமநிலை மற்றும் இணக்கத்தை விரும்பக் கூடியவர்கள். அவர்களது முதல் திருமண வாழ்க்கையில் சமமான மதிப்பு அல்லது அன்னியோன்யமோ கிடைக்கவில்லை என்றால் அந்த உறவை முறித்துக் கொள்ள விரும்பி இரண்டாவது உறவை தேடுவார்கள்.
இதையும் படிங்க: ஐயப்பனுக்கு மாலை போட்டுள்ளீர்களா.?! இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.!
தனுசு
: பொதுவாக இந்த ராசிக்காரர்கள் அதிக சுதந்திரத்தை விரும்புவார்கள். அவர்களை கட்டுப்படுத்த நினைத்தால் ஆபத்தில் சென்று முடிந்துவிடும். மேலும், அவர்கள் அதிகம் தனிமையில் இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். இதற்கு அவர்களது வாழ்க்கை துணை இடைஞ்சலாக இருந்தால் அது விவாகரத்தில் சென்று முடியலாம். அவர்களின் குணம் அறிந்து வாழ்க்கை துணை அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் நுழையாமல் இருப்பது உறவை காக்கும்.
விருச்சிகம்
: இந்த ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவர்கள். மேலும் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அவர்களது ஆர்வத்திற்கு ஈடு கொடுக்கும்படி முதல் திருமண வாழ்க்கை அமையவில்லை என்றால், உடனடியாக அடுத்த திருமணத்திற்கு அவர்கள் தயாராகி விடுவார்கள்.
ரிஷபம்
: ரிஷப ராசிக்காரர்கள் பொதுவாக உறவுகளில் நிலைத்தன்மை இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். ஆனால், அந்த உறவில் பெரிதளவில் அவர்கள் அக்கறையுடன் மற்றும் பொறுப்புடன் நடந்து கொள்வதை விரும்ப மாட்டார்கள். வாழ்க்கைத் துணை அவர்களை புரிந்துகொண்டு பொறுப்புடன் குடும்பத்தை வழிநடத்த வேண்டும் என்று விரும்புவார்கள். இந்த எதிர்பார்ப்புகள் பெரும்பாலும் அவர்களுக்கு கை கொடுப்பதில்லை. எனவே, அவர்களுக்கு முதல் திருமணம் ஒரு பாடமாக அமையும். பெரும்பாலும் ரிஷப ராசிக்காரர்கள் இரண்டாவது திருமணத்தில் தாங்கள் செய்த தவறுகளை திருத்தி அவர்களது விருப்பப்படி நிலைத்தன்மையுடன் உறவை கொண்டு செல்வார்கள்.