நேற்று இந்தியா வெற்றி பெற முக்கிய காரணமே இவர்தான்; சச்சின் யாரை சொன்னார் தெரியுமா?
நேற்று இந்தியா வெற்றி பெற முக்கிய காரணமே இவர்தான்; சச்சின் யாரை சொன்னார் தெரியுமா?

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற 34-ஆவது லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, கேஎல் ராகுல் களம் இறங்கினர். ரோகித் சர்மா 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 48 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தது வெளியேறினார்.
அடுத்து அடுத்து களம் இறங்கிய விஜய் சங்கர், கேதர் ஜாதவ் இருவரும் சொற்ப ரன்களில் விரைவாக ஆட்டமிழந்ததனர். கேப்டன் விராட் கோலி மட்டும் வழக்கம்போல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசியில் அவரும் 72 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
6 ஆவது விக்கெட்டுக்கு இணைந்த தோனி, ஹர்திக் பாண்டியா இருவரும் சிறப்பாக ஆடி ஓரளவு கை கொடுத்தனர். பாண்டியா 46 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். கடைசி வரை களத்தில் இருந்த தோனி 56 ரன்கள் எடுத்தார். முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்களை எடுத்தது.
269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 143 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் கூறும்போது:
இந்த போட்டியில் இந்தியா வெற்றிபெறுவதற்கு முக்கிய காரணம் கோலியின் நல்ல கேப்டென்சிதான். ஆனால் போட்டியை மாற்றியது யார் என்று கேட்டால் அது தோனிதான். அவரின் ஆட்டம்தான் போட்டியை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது. தோனி பாண்டியா சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
அதுதான் முதல் பாதியில் போட்டியை இந்தியா பக்கம் கொண்டு வந்தது. அதனால்தான் நாம் 260+ ரன்களை எடுத்தோம். அவர் இல்லையென்றால் அவ்வளவு ரன்களை எடுத்து இருக்க மாட்டோம். கடைசி ஓவரில் அவர் 16 ரன்கள் எடுத்து அசத்தினார். கடைசி ஓவர் முழுக்கவும் அவர் ஸ்டிரைக் இருந்ததும் மிக சிறப்பாக விஷயம். இதுதான் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது என்று, சச்சின் தெரிவித்துள்ளார்.