விலகிய மூட்டு எலும்பு..! கைகளால் தட்டி சரி செய்த வீராங்கனை..! சிலிர்ப்படைய செய்யும் வீடியோ காட்சி..!

கால்பந்து விளையாடியபோது தலைகுப்புற விழுந்ததில் விலகிய கால் மூட்டு எலும்பை தனது கைகளாலையே வீராங்கனை ஒருவர் அடித்து சரி செய்துள்ள சம்பவம் பார்ப்போரை சிலிர்ப்படைய செய்கிறது.
ஸ்காட்டிஷ் மற்றும் இன்வெர்னஸ் கலிடோனியன் ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான பெண்கள் கால்பந்து போட்டி ஸ்காட்லாந்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கலிடோனியன் அணி 6-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஒரு கோல் கூட அடிக்காத நிலையில் ஸ்காட்டிஷ் அணியினர் கோல் அடிக்கும் முனைப்புடன் தீவிரமாக விளையாடினர்.
இந்த முயற்சியில் ஸ்காட்டிஷ் அணியின் கேப்டன் Jane O’Toole பந்தை வேகமாக அடிக்க முயன்றபோது எதிரணி வீராங்கனையின் மீது அசுரவேகத்தில் மோதி தலைகுப்புற கீழே விழுந்தார். இந்த எதிர்ப்பாராத சம்பவத்தால் Jane O’Toole இன் கால் மூட்டு எலும்பு விலகியது.
ஆனால், யாரையும் உதவிக்கு அளிக்காத Jane O’Toole எழுந்து அமர்ந்து, தனது கைகளாலையே சுத்தியல் போல் விலகிய மூட்டு எலும்பை அடித்து சரி செய்தார். அதுமட்டும் இல்லாமல், சிறிது நேரத்தில் மீட்டும் தனது அணிக்காக விளையாடினர் Jane O’Toole.
அவரின் இந்த அசாத்திய செயலை பார்த்த அனைவரும் சற்று நேரம் பிரமித்து போய் நின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரை சிலிர்ப்படைய செய்கிறது.