நேற்றைய ஆட்டத்தின் மூலம் 12 வருட பகையை பழி தீர்த்த வில்லியம்சன்!

நேற்றைய ஆட்டத்தின் மூலம் 12 வருட பகையை பழி தீர்த்த வில்லியம்சன்!



williamson revenge



இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக்கோப்பை முதல் அரையிறுதி போட்டி நேற்றைக்கு முதல் நாள் தொடங்கி நியூசிலாந்து பேட்டிங் செய்தபோது மழையின் காரணமாக போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் மீதமுள்ள ஆட்டங்கள் நேற்று நடைபெற்ற நிலையில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. இறுதியில் இந்தியா 18  ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதியது. அப்போது நடைபெற்ற போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டது. 

அன்று நடந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்கள் சேர்த்தது. இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய தயாராக இருந்தபோது மழை பெய்தது.

Williamson
 
இதனையடுத்து இந்திய அணிக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 191 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை இந்திய அணி 9 பந்துகள் மீதமுள்ள நிலையில் தகர்த்து அபார வெற்றிப் பெற்றது. அந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணித் தலைவரான வில்லியம்சனின் விக்கெட்டை விராட் கோலி வீழ்த்தினார்.

இந்தப் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வாய்ப்பு 12 ஆண்டுகள் கழித்து வில்லயம்சனிற்கு நடப்பு உலகக் கோப்பை தொடரின் அரை இறுதிப் போட்டி மூலம் கிடைத்தது. நேற்றைய ஆட்டத்தின் மூலம் 12 வருடங்களுக்கு முன்பு அரை இறுதியில் அடைந்த தோல்விக்கு வில்லயம்சன் பழி தீர்த்துக் கொண்டிருக்கிறார்.