விளையாட்டு

உலகக்கோப்பையை வெல்லப்போவது யார்? 6 நாடுகளில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

Summary:

who will win worldcup 2019

இன்னும் இரண்டு நாட்களில் இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்க உள்ளது. இதன் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த முதல் நாளை எதிர்பார்த்து உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

பத்து அணிகள் பங்குபெறும் இந்த பரபரப்பான தொடரில் எந்த அணி உலகக்கோப்பையை வெல்லும் என கணிப்பதில் சாதாரண கிரிக்கெட் ரசிகர்கள் முதல் பல முன்னாள் கிரிக்கெட் ஜாம்பாவான்களும் தங்களது கருத்தினை தெரிவித்து வருகின்றனர். இந்த தொடர் இங்கிலாந்தில் நடைபெறுவதால் இதில் பெரும்பாலும் இங்கிலாந்து அணி தான் கோப்பையை வெல்லும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய படம்

ஆனால் YouGov என்ற தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் இந்திய அணி தான் கோப்பையை வெல்லும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கருத்து கணிப்பானது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா மற்றும் பாக்கிஸ்தான் என ஆறு நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது.

மொத்தம் 6700 பேரிடம் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் இந்தியா அணிக்கு முதலிடமும் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகள் அடுத்த இரண்டு இடங்களையும் பிடித்துள்ளன. இதில் ஆச்சர்யம் என்னவெனில், அணைத்து நாடு மக்களும் தங்களது சொந்த நாட்டிற்கு தான் அதிகமான வாக்குகள் கொடுத்துள்ளார். அதே சமயம் பாகிஸ்தானை தவிர மற்ற நாடுகளில் இந்தியா தான் இரண்டாமிடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் 75%, நியூசிலாந்தில் 22%, ஆஸ்திரேலியாவில் 16% பேர் கோலி தலைமையிலான இந்தியா அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் பாகிஸ்தானில் மட்டும் 2% பேர் மட்டுமே இந்தியாவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.


Advertisement