பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் ஒன்று சேர்ந்த பாக்யா மற்றும் கோபி..அதிர்ச்சியில் ராதிகா.?
வார்னருக்கு பதில் களமிறங்கும் அந்த அதிரடி வீரர் யார்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
வார்னருக்கு பதில் களமிறங்கும் அந்த அதிரடி வீரர் யார்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 50 போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில் சீசன் 12 இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. நடப்பு சாம்பியான சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும், டெல்லி அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. மேலும் இந்த அணிகள் இரண்டும் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.
இந்நிலையில் மும்பை மற்றும் கைதராபாத் அணிகள் மோதும் போட்டியானது இன்று இரவு 8 மணிக்கு மும்பையின் சொந்த மண்ணில் நடைபெறவுள்ளது. கைதராபாத் மற்றும் மும்பை அணிகள் இரண்டும் அடுத்த சுற்றுக்கு முன்னேற போராடிவருவதால் இன்றைய ஆட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கைதராபாத் அணிக்கு தூணாக விளங்கிய வார்னர் உலகக்கோப்பை வருவதை முன்னிட்டு கைதராபாத் அணியை விட்டு வெளியேறியுள்ளார். 692 ரன்களை குவித்து, இதுவரை இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரராக வார்னர் உள்ளார். வார்னரின் இந்த வெளியேற்றத்தால் கைதராபாத் அணி இக்கட்டான நிலையில் உள்ளது.
இந்நிலையில் வார்னருக்கு பதில் கைதராபாத் அணியில் யார் விளையாடப்போகிறார் என்ற கேள்வி எழுந்ததை அடுத்து, வார்னருக்கு பதில் மார்ட்டின் குப்தில் அல்லது பில்லி ஸ்டேன்லேக் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.