விளையாட்டு

IPL 2020: மீண்டும் புதிய சிக்கல்.. டைடில் ஸ்பான்ஸரில் இருந்து விலகியது VIVO!

Summary:

Vivo exits from ipl 2020 title sponsor

2020 ஐபிஎல் தொடருக்கான டைடில் ஸ்பான்ஸரில் இருந்து சீன நிறுவனமான விவோ விலகுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2018 முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு ஐபிஎல் தொடருக்கான டைடில் ஸ்பான்ஸராக சீனாவை தலைமையிடமாக கொண்ட விவோ நிறுவனம் பசிசிஐ உடன் ஒப்பந்தம் செய்தது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் விவோ நிறுவனம் 440 கோடி வழங்கி வந்தது.

ஆனால் தற்போது இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெறுவதால் சீனாவின் நிறுவனங்களுக்கு இந்தியாவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதனால் ஐபிஎல் தொடருக்கான டைடில் ஸ்பான்ஸரில் இருந்து இந்த ஆண்டு மட்டும் விலகிக்கொள்வதாக விவோ பிசிசிஐயிடம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஐபிஎல் 2020 டைடில் ஸ்பான்ஸரில் இருந்து விவோ விலகுவதாக இன்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்னதாக அடுத்த டைடில் ஸ்பான்ஸரை தேட வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் பிசிசிஐ இருந்து வருகிறது.


Advertisement