விராட்கோலி படைத்த புதிய சாதனை!. பிறநாட்டு வீரர்களும் புகழ்ந்து தள்ளுகின்றனர்!.



virat kohli get new record


ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதி வேகமாக 10,000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்த விராட்கோலிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி மீண்டும் சதமடித்தார். அவர் நேற்று 81 ரன்கள் எடுத்த போது, அவரது ஒட்டுமொத்த ரன் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தொட்டது.

இதன்மூலம் 10 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்தவர் என்ற புதிய சாதனையை விராட்கோலி படைத்தார். இதையடுத்து விராட்கோலிக்கு பல்வேறு வீரர்கள் வாழ்த்துக்கள் கூறியுள்ளனர்.



இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் தனது டுவிட்டர் பதிவில், வேகமாகவும், சிறப்பாகவும் 10 ஆயிரம் ஓட்டங்களை தொட்டுள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். இதுபோன்று பல நாட்டு வீரர்களும் விராட்கோலிக்கு வாழ்த்துக்கள் கூறிவருகின்றனர்.