ஹாட்ரிக் சதம் அடித்து சாதனை படைத்த விராட் கோலி! தொடரும் சாதனை பட்டியல்



virat-kholi-hatrick-century

இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று புனேயில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பவுலிங் செய்வதாக அறிவித்தார்.

இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்தது. சென்ற ஆட்டத்தில் சதமடித்து அசத்திய அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஹோப் இந்த ஆட்டத்திலும் சிறப்பாக ஆடினார். ஆனால் 95 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் போல்டாகி சதமடிக்கும் வாய்ப்பை இழந்து வெளியேறினார். 

இந்திய அணியின் சார்பில் பும்ரா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 8 ரன்னிலும், ஷிகர் தவான் 35 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி இந்த தொடரில் தொடர்ந்து தனது மூன்றாவது சதத்தை அடித்து அசத்தியுள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டியில் விராட் கோலி அடித்த 38 வது சதம் இதுவாகும்.

virat kholi hatrick century

தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் விராட் கோலி என்ற சாதனையை படைத்தார். ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 4 போட்டிகளில் சதம் அடித்து முதலிடத்தில் உள்ளார் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககரா. இவரது சாதனையை அடுத்த போட்டியில் கோலி முறியடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்திய அணியின் மற்ற வீரர்களான அம்பத்தி ராயுடு 22 ரன்னிலும் ரிசப் பண்ட் 24 ரன்னிலும், தோனி 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 38 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. கோலியுடன் இணைந்து புவனேஷ் குமார் ஆடி வருகிறார். கோலி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து செல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.