சினிமா விளையாட்டு Celebrities Valentine

கோலி-அனுஷ்கா காதலர் தின கொண்டாட்டம்! வைரலாகும் புகைப்படங்கள்!

Summary:

Virat anushka celebrates Valentine's day photos

ஒரு கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல் ஒரு கணவராகவும் தனது மணைவிக்கு பிடிக்கும் வகையில் நடந்துகொள்ள கூடியவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. 

2013 ஆம் ஆண்டு முதல் காதலிக்க துவங்கிய கோலி-அனுஷ்கா ஜோடி 2017 ஆம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் அனுஷ்கா கோலி விளையாடும் முக்கியமான போட்டிகளை நேரில் காண தவறுவதில்லை. அதே போல் கோலியும் ஓய்வு நேரங்களில் தனது மணைவியுடன் நேரத்தை செலவிடவே விரும்புவார். 

இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் காதலர் தினத்தை கோலி-அனுஷ்கா ஜோடி நேற்று நள்ளிரவே டெல்லியில் உள்ள தங்களது சொந்த ஹோட்டலான நியூவா(NUEVA) ரெஸ்டாரண்டில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணயத்தில் வைரலாகி வருகின்றன. 


Advertisement