மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ஆதரவு யாருக்கு?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ஆதரவு யாருக்கு?


Vijay sethupathi supports tamil talaivas pro kabadi team

தனது எதார்த்தமான நடிப்பாலும், வெளிஉலகில் தனது எதார்த்தமான பேச்சாலும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

அவர் கையில் தற்போது அரை டஜன் படங்கள் ரீலீசுக்கு காத்திருக்கின்றன. அவர் ஏற்கனவே விளம்பரபடங்களில் நடித்து வருகிறார். தற்போது புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அணிக்கு விளம்பர தூதராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

vijay sethupathi

6-வது புரோ கபடி லீக் போட்டி தொடர் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந் தேதி தொடங்குகிறது. பல்வேறு இடங்களில் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 5-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் தபாங் டெல்லி, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பால்டன், மும்பை (ஏ பிரிவு), பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், உ.பி.யோத்தா ஆகிய 12 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன.

இந்த சீசனுக்கான புரோ கபடி லீக் போட்டிக்கான தமிழ் தலைவாஸ் அணியின் சீருடை அறிமுக நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாகூர், பயிற்சியாளர் கே.பாஸ்கரன், அணியின் தூதுவர் நடிகர் விஜய் சேதுபதி, தலைமை செயல் அதிகாரி வீரென் டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டு சீருடையை அறிமுகம் செய்து வைத்தனர். இதில் வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டு புதிய சீருடையுடன் போஸ் கொடுத்தனர்.

vijay sethupathi

தமிழ் தலைவாஸ் அணியின் தூதுவரும், நடிகருமான விஜய் சேதுபதி பேசுகையில், ‘நமது பாரம்பரிய ஆட்டமான கபடி வேகம், விவேகம் நிறைந்ததாகும். மக்களின் மனம் கவர்ந்த இந்த போட்டிக்கு நாம் எல்லோரும் ஆதரவு அளிக்க வேண்டியது அவசியமானதாகும். தமிழ் தலைவாஸ் அணியின் தூதுவராக நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். கிரிக்கெட்டை தாண்டி கபடி புதிய உச்சத்தை எட்டும்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.