விளையாட்டு

போட்டியின் போது என்ன நடந்தது..? மோதிக்கொண்ட வீரர்கள்.. அதிர்ச்சியுடன் பார்த்த விராட்கோலி.. வைரல் வீடியோ..

Summary:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியின்போது இந்திய வீரர் க்ருணால

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியின்போது இந்திய வீரர் க்ருணால் பாண்டியா மற்றும் இங்கிலாந்து வீரர் டாம் குர்ரான் இடையே நடந்த வார்த்தை மோதல் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

டெஸ்ட், T20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணியுடன் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மிக அபாரமாக விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்கள் அடித்தது.

இந்திய அணி சார்பாக தவான் 98 ரன்களும், விராட்கோலி 56 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தநிலையில், KL ராகுல் - க்ருணால் பாண்டியா ஜோடி மிக அபாரமாக ஆடி அணியின் எண்ணிக்கை வேகமாக உயர்த்தியது. குறிப்பாக இவர்கள் இருவரும் சேர்ந்து கடைசி 10 ஓவரில் 100 ரன்களும் மேல் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

மேலும் ஒருநாள் போட்டியில் அறிமுகமான முதல் போட்டியிலையே, அரை சதமடித்து அசத்தியுள்ளார் க்ருணால் பாண்டியா. அது மட்டுமில்லாமல், முதல் ஒரு நாள் போட்டியில், அதிவேகமாக அரை சதமடித்த (26 பந்துகள்) வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

போட்டியின் 49 வது ஓவரில்தான் க்ருணால் பாண்டியா அரைசதத்தை கடந்தார். அப்போது பந்து வீசிக்கொண்டிருந்த இங்கிலாந்து வீரர் டாம் குர்ரான் க்ருணால் பாண்டியவிடம் ஏதோ கூறியதாக தெரிகிறது. இதனால் கடுப்பான க்ருணால் பாண்டியா டாம் குர்ரானை பார்த்து ஏதோ கோவமாக பேச தொடங்கினார்.

உடனே நடுவர் ஓடிவந்து அவர்கள் இருவரையும் சமாதம் செய்து அனுப்பிவைத்தார். மேலும் இந்த காட்சிகள் அனைத்தையும் வெளியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த விராட்கோலி என்ன நடக்கிறது என தெரியாமல் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement