டெஸ்ட் அரங்கில் மோசமான சாதனை படைத்த ஆஸ்திரேலியாவின் மார்ஷ் சகோதரர்கள்!

டெஸ்ட் அரங்கில் மோசமான சாதனை படைத்த ஆஸ்திரேலியாவின் மார்ஷ் சகோதரர்கள்!



the worst record of Marsh brothers in test series

அபுதாபியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 

இரு அணிகளுக்கும் இடையே அபுதாபியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 373 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதுவரை பாகிஸ்தான் டெஸ்ட் அரங்கில் பெற்ற வெற்றியில் இதுவே அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும்.

the worst record of Marsh brothers in test series

பாகிஸ்தான் அணி இப்படி ஒரு சாதனையை படைக்க ஆஸ்திரேலிய வீரர்களான சகோதரர்கள் ஷான் மார்ஷ் மற்றும் மிச்செல் மார்ஷ் மிகவும் மோசமான ஒரு சாதனையை படைத்துள்ளனர். 

ஆஸ்திரேலிய அணியிலிருந்து டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டதிலிருந்து அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. அதற்கு உதாரணமாக இந்த தொடர் அவர்களுக்கு அமைந்துள்ளது. இந்த தொடரில் நான்கு இன்னிங்ஸிலும் களமிறங்கிய முதல் ஆறு பேட்ஸ்மேன்களில் இரண்டு பேர் 5 க்கும் குறைவான சராசரி ரன்களை எடுத்துள்ளனர்.

the worst record of Marsh brothers in test series

இந்தத் தொடரில் ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ் சகோதரர்கள் 4 இன்னிங்ஸ்களில் முறையே 3.50, 4.50 என்ற சராசரியில் ரன்கள் எடுத்துள்ளனர். முதல் 6 ஆஸ்திரேலியா பேட்ஸ்மென்களில் இருவர் 8 ரன்களுக்கும் குறைவாக ஒரு டெஸ்ட் தொடரில் சராசரி வைத்திருந்தது 46 ஆண்டுகளுக்கு முன்பாக 1972 ஆஷஸ் தொடரில் தான். டக் வால்டர்ஸ், கிரேம் வாட்சன் இருவரும் முறையே 7.71, 5.25 என்று டெஸ்ட் தொடரில் சராசரி வைத்திருந்தனர்.

அவர்களுக்கு பிறகு இந்த தொடரில் மார்ஷ் சகோதரர்கள் இந்த மோசமான சாதனையை புரிந்துள்ளனர். அவர்கள் இந்த தொடரின் 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து எடுத்த ரன்களின் புள்ளிவிவரம் பின்வருமாறு:

ஷான் மார்ஷ்: 7, 0, 3, 4
மிட்செல் மார்ஷ்: 12, 0, 13, 5