இந்தியா விளையாட்டு

பாதுகாப்பு கண்ணாடிக்கு அந்த பக்கம் இருந்த மனைவிக்கு முத்தம் கொடுத்த சூர்யகுமார் யாதவ்.! கொரோனாவை வென்ற காதல்..!

Summary:

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தநிலையில்,

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தநிலையில், நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில், மும்பை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில், மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்த போட்டி முடிந்த பின்பு, மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ், தன்னுடைய மனைவி தேவிஷாவுக்கு தன்னுடைய அன்பான முத்ததை கொடுத்ததார். கொரோனா பரவல் காரணமாக வீரர்கள் பப்புள் வளையத்திற்குள் இருப்பதால், சூர்யகுமார் யாத்வ் பாதுகாப்பு கண்ணாடிக்கு அந்த பக்கம் இருந்த தன்னுடைய மனைவிக்கு , இந்த பக்கம் இருந்தே கண்ணாடி வழியாக முத்தம் கொடுத்தார்.

இதனை ஜாகிர்கானின் மனைவியான சகரிகா கட்கே  தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தநிலையில், தனது அன்பு மனைவிக்கு சூர்யகுமார் யாதவ் பாதுகாப்பு கண்ணாடிக்கு இடையில் முத்தம் கொடுத்த புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.


Advertisement