இதெல்லாம் சினிமாவில் தான் பார்த்திருப்போம்.! ஒலிம்பிக் போட்டியில் கீழே விழுந்து.. மீண்டும் எழுந்து முதலிடம் பிடித்த வீராங்கனை.! வைரல் வீடியோ.!

இதெல்லாம் சினிமாவில் தான் பார்த்திருப்போம்.! ஒலிம்பிக் போட்டியில் கீழே விழுந்து.. மீண்டும் எழுந்து முதலிடம் பிடித்த வீராங்கனை.! வைரல் வீடியோ.!


stumbled-down-and-got-up-again-and-ran-to-the-winning-a

32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தநிலையில் ஒலிம்பிக் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நெதர்லாந்து வீராங்கனை சிஃபான் ஹசன் கலந்துகொண்டார். இவர் நடப்பு உலக சாம்பியன் ஆவார்.

இந்நிலையில் போட்டி துவங்கிய சில விநாடிகளிலேயே சிஃபான் ஹசன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதற்குள் மற்ற போட்டியாளர்கள் சில மீட்டர்கள் தூரம் கடந்துவிட்டனர். அதுவும் இவருக்கு முன்னால் 15 போட்டியாளர்கள் சென்றுவிட்டனர்.

இருப்பினும் அவர் மனம் தளராமல் மீண்டும் எழுந்து தனது ஓட்டத்தைப் புத்துணர்ச்சியோடு துவங்கி, படிப்படியாக போட்டியாளர்கள் அனைவரையும் தாண்டி முதல் வீராங்கனையாக இலக்கை எட்டி அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார்.

பின்னர் சில மணி நேரத்திலேயே நடைபெற்ற 5000 மீ ஓட்டப் பந்தயத்திற்கான இறுதிப்போட்டியில்14.36.79 நிமிடங்களில் இலக்கை எட்டி தங்கப்பதக்கத்தை  அபாரமாக வென்றார். எதிர் நீச்சல் அடித்து தங்கம் வென்ற அந்த வீராங்கனைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது