இந்தியா விளையாட்டு

தல தோனியிடம் மைதானத்தில் காதலை சொன்ன இலங்கை பெண்! தோனியின் ரியாக்சன்! வைரல் வீடியோ

Summary:

srilanga girl propesed love to MS Dhoni


உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி இங்கிலாந்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் அணைத்து வீரர்களும் மோசமாக ஆடினர். அந்த ஆட்டத்தில் தோனியின் மந்தமான ஆட்டம் இந்திய ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

தல தோனிக்கு உலக அளவில் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர், இந்தநிலையில் தோனியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தோனி, மைதானத்தில் அமர்ந்திருந்து அணியின் ஆட்டத்தினை அங்கிருந்த கம்ப்யூட்டரில் கவனித்து வந்தார். அப்போது திடீரென்று பெண் ஒரு "தோனி ஐ லவ் யூ" என்று எழுதிய கடிதத்தை கேமரா முன்பு காட்டியுள்ளார். அதை பார்த்த தோனி முகத்தை மூடி வெட்கப்படுகிறார்.

இந்த வீடியோ காட்சி பழமையானதாக இருந்தாலும். தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் தோனியின் இந்த வெட்கம் காலத்தால் அழியாத காட்சி என இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். 


Advertisement