விளையாட்டுத்துறை அமைச்சர் வீராங்கனை மீது கும்மாங்குத்து!. அமைச்சரிடம் வீராங்கனை செய்த செயல்!.



sports minister fight with women boxer


டெல்லி இந்திராகாந்தி மைதானத்தை மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பார்வையிட்டார். அப்போது அங்கு இருந்த குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமுடன் விளையாட்டு தொடர்பாக விசாரித்துள்ளார். 

இதனையடுத்து விளையாட்டாக குத்துச்சண்டையில் மேரிகோமுடன் ஈடுபட்டார்.  அப்பொழுது மந்திரியின் குத்துகளை லாவகமாக தடுத்துள்ளார். 

                                   sports minister

மேலும் குத்துச்சண்டையில் எப்படி ஈடுபடுவது என்பது பற்றி மந்திரிக்கு விளக்கமும் அளித்தார். ஆனாலும்  கடைசி வரை குத்துச்சண்டை வீராங்கனைஇடம் அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் அவர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை. 

விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ள அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.