சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மீண்டும் ஒரு முக்கிய வீரர் ஓய்வு!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மீண்டும் ஒரு முக்கிய வீரர் ஓய்வு!



Simmons leave from cricket

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர் சிம்மன்ஸ் அறிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 2006ஆம் ஆண்டு முதல் கடந்த 16 வருடங்களில் 144 சர்வதேச போட்டிகளில் சிம்மன்ஸ் விளையாடியுள்ள இவர் 3763 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார்.

Simman

37 வயதாகும் சிம்மன்ஸ் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் கடந்த 16 வருடங்களாக தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச போட்டிகளில் இருந்து மட்டுமே ஓய்வு பெறுவதாகவும் உள்ளூர் போட்டிகளிலும் சர்வதேச லீக் போட்டிகளிலும் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார். சிம்மன்ஸ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஐந்து டி20 உலகக்கோப்பை தொடர்களிலும் 2 ஒரு நாள் உலக கோப்பை தொடர்களில் விளையாடி உள்ளார்.