இந்தியா விளையாட்டு

பசியால் தவித்த விலங்குகளுக்கு குடும்பத்துடன் தேடிச் சென்று உணவளித்த ஷிகர் தவான்! வைரல் வீடியோ!

Summary:

sikar dhawan give food for cow

கொரோனா வைரஸ் பாதிப்பால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வீட்டிற்குள்ளே முடங்கி இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்களில் பெரும்பாலானோர் சமூக வலைத்தளங்களில் தங்கள் நேரத்தைச் செலவிடுகின்றனர். 

கொரோனாவால் உலகம் முழுவதும் உள்ள உயிரினங்கள் உணவில்லாமல் தவித்து வருகின்றனர். இதனை மனதில் கொண்டு நல்ல உள்ளம் கொண்ட பலர் விலங்குகளுக்கு உணவளித்து வருகின்றன. அந்த வகையில் தவானும், அவரது மகன் ஜோராவரும் பசியில் இருந்த விலங்குகளுக்கு உணவளித்துள்ளனர்.

இந்நிலையில் தனது குடும்பத்துடன் சாலையில் பசியுடன் திரியும் மாடுகளுக்கு ஷிகர் தவான் உணவளித்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் தவானும், அவரது மகனும் மாடுகளுக்குக் காய்கறிகளை வழங்குகின்றனர்.

மேலும், அந்த பதிவில், "தனது மகனுக்கு வாழ்க்கையின் உண்மையான மதிப்புகளை கற்பிப்பது முக்கியம் என்றும், இந்த சோதனை காலங்களில் தேவைப்படுபவர்களுக்கு உதவுவதில் தங்கள் பங்கைச் செய்யுமாறு" தனது ரசிகர்களை தவான் கேட்டுக்கொண்டார்.


Advertisement