இந்திய அணியால் செம்ம அப்செட்டான நடிகர் சரத்குமார்.! ஆவேசமாக என்ன வார்த்தை சொல்லிட்டாரு பார்த்தீர்களா.!!

இந்திய அணியால் செம்ம அப்செட்டான நடிகர் சரத்குமார்.! ஆவேசமாக என்ன வார்த்தை சொல்லிட்டாரு பார்த்தீர்களா.!!


sarathkumar tweet about india cricket team loss

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. நேற்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி தான் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளது என்ற நிலை இருந்தது. இந்தநிலையில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வீரர்கள் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற  இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 14.3 ஓவரிலேயே 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதனால் இந்திய அணி அரையிறுதிக்குள் செல்லும் வாய்ப்பு கேள்விகுறியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர். மேலும் பலரும் அவர்களுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய தோல்விக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், நேற்றைய ஆட்டமானது பொறுப்பற்ற வெட்கப்படத்தக்க ஆட்டம்.  நமீபியா, ஸ்காட்லாந்து, மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் அசிங்கப்படுவதற்குள் போட்டியில் இருந்து வெளியேறுவது நல்லது. மேலும் மற்ற அணிகள் தங்கள் நாட்டுக்காக விளையாடுகிறார்கள். டி20 ஆட்டத்தை நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள். ஆனால் எங்கள் வீரர்கள் ஐபிஎல் மட்டுமே விளையாடட்டும் என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.