யாரு சாமி நீ..!! முதல் ஓவரிலேயே ஒட்டுமொத்த அணிகளையும் கதிகளங்க வைத்த இளம் வீரர்.! வரலாற்று சாதனை.!

யாரு சாமி நீ..!! முதல் ஓவரிலேயே ஒட்டுமொத்த அணிகளையும் கதிகளங்க வைத்த இளம் வீரர்.! வரலாற்று சாதனை.!


Ruben Trumpelmann new record

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12-சுற்றுப் போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 லீக் போட்டியில் நேற்று ஸ்காட்லாந்து அணியும் நமீபியா அணியும் மோதின. நேற்றைய போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது நமீபியா.

நேற்றைய ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஸ்காட்லந்து 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 109 ரன்களை மட்டுமே எடுத்து. அடுத்ததாக விளையாடிய நமீபியா அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 நேற்றைய ஆட்டத்தின் முதல் ஓவரை  நமீபியா அணியின் ரூபன் ட்ரெம்பல்மேன் வீசினார். முதல் ஓவரின் முதல் பந்தில் ஸ்காட்லாந்து அணியின் அதிரடி துவக்கவீரர் முன்சே போல்ட் ஆனார். இதனையடுத்து மூன்றாவது பந்தில் மெக்லாயிடு கேட்ச் கொடுத்து வெளியேறினார். 4வது பந்தில் அந்த அணியின் கேப்டன் பெரிங்க்டன் lbw முறையில் அவுட் ஆனார். நேற்றைய போட்டியின் மூலம் டி20 உலககோப்பை போட்டிகளில் முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை அதுவும் மூன்று வீரர்களையும் டக் அவுட் செய்த பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரூபன் ட்ரெம்பல்மேன்.