இந்தியா விளையாட்டு

புதிய உலக சாதனை படைத்துள்ள டான் ரோஹித் சர்மா.!

Summary:

rohit sharma in new record

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

கடந்த போட்டியில் மிகவும் மோசமாக தோல்வியுற்ற இந்திய அணி அதே வீரர்களுடன் களமிறங்கியது. நியூசிலாந்து அணியில் எந்த மாற்றமும் இல்லை.

அதனை தொடர்ந்து முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. 

159 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா, தொடக்கம் முதலே அடித்து ஆடினார். அதிரடியாக ஆடிய அவர், 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 29 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களத்திற்கு வந்த ரிஷப் பண்ட், பொறுப்புடன் ஆடினார். 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 

இன்றைய போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம் சர்வதேச டி-20 அரங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து உலக சாதனை படைத்துள்ளார் ரோகித் சர்மா. 

சர்வதேச டி-20 அரங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்: 

2288 ரோகித் சர்மா 
2272 கப்டில் 
2263 சோயிப் மாலிக் 
2167 விராட் கோலி
2140 பிரண்டன் மெக்கலம் 


Advertisement