சட்டை இல்லாமல் கிரிக்கெட் விளையாடிய வீரர்.. கிரிக்கெட் வரலாற்றுலேயே இப்படி பாத்திருக்க மாட்டீங்க.. வைரல் வீடியோ..

சட்டை இல்லாமல் கிரிக்கெட் விளையாடிய வீரர்.. கிரிக்கெட் வரலாற்றுலேயே இப்படி பாத்திருக்க மாட்டீங்க.. வைரல் வீடியோ..


rohan-mustafa-without-jersey-viral-video

அபுதாபியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வீரர் ஒருவர் ஜெர்சி அணியாமல் பந்தை விரட்டிச்சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்தியாவில் நடைபெறும் T20 தொடர் போன்று அபுதாபியில் டி10 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சமீபத்திய ஆட்டத்தில் டீம் அபுதாபி மற்றும் நார்தன் வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் அபுதாபி அணிக்காக விளையாடிய UAE அணி வீரர் ரோஹன் முஸ்தபா பவுண்டரி லைனில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் அணிந்திருந்த ஜெர்சி மிக அதிகமான வியர்வையினால் நனைந்துபோயிருந்தநிலையில், அந்த ஜெர்சியை கழட்டிவிட்டு வேறொரு ஜெர்சியை அவர் அணிவதற்கு முன்னதாக பவுலர் பந்தை வீச, அந்த பந்து நேராக பவுண்டரி லைனில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ரோஹன் முஸ்தபாவிடம் வந்தது.

அவர் அந்த நேரம் பார்த்து ஜெர்சி மாற்றிக்கொண்டிருந்ததால் அவரால் பந்தை தடுக்க முடியவில்லை. இந்நிலையில் ரோஹன் முஸ்தபா ஜெர்சி இல்லாமல் பந்தை தடுக்க முயலும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. மேலும் ரோஹன் முஸ்தபாவின் செயலை பார்த்து, சக வீரர்கள், நடுவர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் சிரித்திவிட்டனர்.