கோலி தான் வராரு... கப் தூக்க போறாரு.! இன்று தான்.. அதுக்கு ஒரு முடிவு.! ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பு.!

கோலி தான் வராரு... கப் தூக்க போறாரு.! இன்று தான்.. அதுக்கு ஒரு முடிவு.! ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பு.!


rcb vs mumbai indains match today

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று (09.04.2021) முதல் மே 30-ந்தேதி வரை சென்னை, பெங்களூரு, மும்பை, ஆமதாபாத், கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கிங்ஸ் லெவன் பஞ்சாப் , ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இ்ந்தியன்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது. ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத பெங்களூரு அணி இந்தாண்டு முக்கிய வீரர்களுடன் கோப்பையை கைப்பற்றும் என ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

rcb

விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த சீசனில் அதிக தொகை கொடுத்து ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல்லையும், நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் கைல் ஜாமிசனையும் ஏலத்தில் எடுத்துள்ளனர். ஏற்கனவே அந்த அணியில் அதிரடி வேட்டைக்கு டிவில்லியர்சும் காத்திருக்கிறார். இதனால் இந்த முறை கோப்பை  கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு தான் என ஆர்சிபி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.