ராஜஸ்தான் அணியின் தாறுமாறான டார்கெட்.! வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியடைந்த சென்னை அணி.!rajasthan-team-won-csk

2020 ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது . இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆரம்பத்திலேயே சிறப்பாக ஆடியது. அந்த அணியின் சஞ்சு சாம்சன் களம் இறங்கி பந்துகளை நாலாபக்கமும்  பறக்கவிட்டார். அவர் சிறப்பாக ஆடியதால் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் வேகமெடுக்க ஆரம்பித்தது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன் 9 சிக்ஸ் அடித்து 32 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். ஸ்டீவ் ஸ்மித் 47 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்திருந்தது. 

ipl

இதனையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பத்தில் நிதானமாக ஆடியது. சிஎஸ்கே அணியின் வாட்சன் 21 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார். முரளி விஜய் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். டுபிளெசிஸ் ஆரம்பத்தில் நிதானமாக ஆடி பின்னர் அவர் அடித்த அதிரடி சிக்ஸர்களால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது. 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.