டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்த இரு அணிகள் தான் மோதும்.. அடித்துக் கூறும் ரிக்கி பாண்டிங்..!

டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்த இரு அணிகள் தான் மோதும்.. அடித்துக் கூறும் ரிக்கி பாண்டிங்..!


Ponting about T20 worldcup finalists

சர்வதேச டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. எதிர்வரும் இந்த உலக கோப்பை தொடரில் எந்த அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும் எந்த அணி கோப்பையை வெல்லும் என தனது கருத்துக்களை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

அவரது கருத்துப்படி இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணியும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் எதிர்கொள்ளும் எனக் கூறியுள்ள அவர் இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால் இறுதிப் போட்டியில் வெல்லும் அதிக வாய்ப்பு ஆஸ்திரேலிய அணிக்கே உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாகிஸ்தான் அணியின் வாய்ப்பினை பற்றி பேசியுள்ள அவர் அந்த அணியை பொறுத்தவரை பாபர் அசாம் சிறப்பாக பேட்டிங் செய்தால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என கூறியுள்ளார்.