உலகம் விளையாட்டு

மக்களே உஷார்! ப்ளூவேல் கேமை தொடர்ந்து மிரட்ட வருகிறது பாலிங் டவுன் கேம்.

Summary:

pauling down game is famous yeamen country

பலரது உயிரை காவு வாங்கிய ப்ளூவேல் விளையாட்டை தொடர்ந்து தற்பொழுது ஏமனில் மிகவும் பிரபலமடைந்து வரும் கேம் பாலிங் டவுன். இது இந்தியாவிலும் பரவும் அபாயம் இருப்பதால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

ரஷ்யாவில் தொடங்கி உலகம் முழுவதும் வைரலாகி வரும் பாலின் டவுன் கேம் தற்பொழுது ஏமன் நாட்டில் பிரபலமடைந்து வருகிறது. இதில் என்ன ஒரு கொடுமை என்றால் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அங்கு வறுமையின் பிடியில் அந்த நாடு சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.

பாலிங் டவுன்

 உணவு, தண்ணீர் இல்லாமல் ஒவ்வொரு வாரமும் கணிசமான அளவு மக்கள் இறந்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் பலரது நிலைமை கேள்விக்குறியாகவே உள்ளது இந்த நிலையில் அங்கு வசிக்கும் பணக்காரர்கள் இந்த விளையாட்டை விளையாடி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இந்த விளையாட்டில் கலந்து கொள்வோர் தாங்கள் இருக்கும் சூழலில் தலைகுப்புற விழுந்து புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட வேண்டும் என்பது விதி. இந்த விளையாட்டை தற்போது ஏமன் நாட்டில் வசிக்கும் ஏழை மக்களும் விளையாட தொடங்கியுள்ளார்கள் என்பது வேதனைக்குரியது.

குப்புற விழ வேண்டும்

தாங்கள் அமர்ந்திருக்கும் நிலையில், கார் படிக்கட்டு, படகு, கப்பல்களின் படிக்கட்டு சாலைகள் என கண்ட கண்ட இடங்களில் தலைகுப்புற விழுந்து புகைப்படம் எடுப்பது என்ற வினோதமான விளையாட்டை ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் பலருக்கு இடையூறு ஏற்படும் விதமாக இந்த விளையாட்டு விளங்குகிறது.

 


Advertisement