அம்மாடியோவ்.. சிரிப்பை அடக்க முடியாத ரன் அவுட் முயற்சி..! ஆஸ்திரேலிய வீரர் பகிர்ந்த வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் வீடியோ.!

அம்மாடியோவ்.. சிரிப்பை அடக்க முடியாத ரன் அவுட் முயற்சி..! ஆஸ்திரேலிய வீரர் பகிர்ந்த வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் வீடியோ.!


pat-cummins-shared-video

ஐரோப்பிய T10 கிரிக்கெட் லீக் போட்டி ஒன்றில் நடந்த ரன் அவுட் முயற்சி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த ஆட்டத்தில் பந்துவீச்சாளர் பந்து வீசியபோது பேட்ஸ்மேன் அந்த பந்தை அடிக்காமல் தவறவிடுகிறார். அந்த சமயத்தில் அவர் ரன் ஓட நினைத்தபோது, அவரை அவுட் செய்ய விக்கெட் கீப்பர் முயற்சிக்கிறார். அதற்குள் பேட்ஸ்மேன் ரீச் ஆகிவிடுகிறார். ஆனால் மறுமுனையில் இருந்த வீரர் மற்றொரு ரன் எடுக்க ஓடி வந்துவிட்டார்.

இதனையடுத்து அவரை அவுட் செய்வதற்காக விக்கெட் கீப்பர் பந்தை எடுத்து பந்துவீச்சாளரிடம் வீசுகிறார். ஆனால் பந்துவீச்சாளர் பந்தை பிடிக்காமல் தவறவிடுகிறார்.  உடனடியாக பேட்ஸ்மேன்கள் மற்றொரு ரன்னை எடுக்கின்றனர். இவ்வாறு அந்த அணியின் சொதப்பல்களால் பேட்ஸ்மேன்கள் 3 ரன்களை எடுத்துவிட்டனர்.


இதுதொடர்பான வீடியோவை ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், திரும்ப திரும்ப இதனை பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லை என பதிவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.