இதெல்லாம் ஆஸ்திரேலிய வீரரால் மட்டுமே முடியும்.! ஆட்டத்தையே தலைகீழாக மாற்றிய பேட் கம்மின்ஸ்.!

இதெல்லாம் ஆஸ்திரேலிய வீரரால் மட்டுமே முடியும்.! ஆட்டத்தையே தலைகீழாக மாற்றிய பேட் கம்மின்ஸ்.!


pat cummins played very well in yesterday match

2022 ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய மும்பை இந்தியன் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 161 ரன்கள் குவித்தது.

கொல்கத்தா அணியின் பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கும் சீரான இடைவெளிகளில் அடுத்தடுத்த விக்கெட்கள் இழந்து தடுமாறியது.

வெங்கடேஷ் ஐயர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்த நிலையில், 6வது விக்கெட்க்கு களமிறங்கிய பேட் கம்மின்ஸ் 15 பந்துகளில் 56 ரன்களை குவித்து அணியை 16 ஓவர்களில் வெற்றிக்கு அழைத்து சென்றார். 15 பந்துகளில் 56 ரன்களை குவித்து அதிரடி காட்டிய பேட் கம்மின்ஸ் ஆட்டத்தின் நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.