விளையாட்டு Covid-19

அதிக ரசிகர்களை கவர்ந்த அதிரடி கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதி! எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என வேண்டுகோள்!

Summary:

Pakistan palayer afridi affected by corona

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் ஷாஹித் அப்ரிடிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு இன்றளவும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.  இந்த கொடூர வைரஸின் காரணமாக அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் ஐபிஎல் போட்டி நடக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில், அதுவும் நடைபெறுவதற்கு தற்போது வாய்ப்பில்லை என உறுதியானது.

 இந்த நிலையில் விளையாட்டு வீரர்கள் அனைவரும் வீட்டிற்குள்ளே முடங்கி உள்ளனர். இந்த நிலையில் விளையாட்டு வீரர்கள் சமூக வலைத்தளங்களில் உரையாடி வருவதே ரசிகர்களுக்கு பெரும் விருந்தாய் அமைந்து வருகிறது. விளையாட்டு வீரர்களும் பொதுமக்களுக்கு இந்த கொடூர வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.


 இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாஹித் அப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில், வியாழக்கிழமையில் இருந்து எனக்கு உடல்நிலை சரியில்லை. என் உடல் மோசமாக வலித்தது. நான் கொரோனா பரிசோதனை செய்தேன். துரதிர்ஷ்டவசமாக எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. விரைவில் மீண்டு வர பிரார்த்தனை தேவை. இன்ஷா அல்லாஹ் எனத் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வர எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார். 


Advertisement