பாகிஸ்தானை திணறடித்த இலங்கை பந்துவீச்சாளர்கள்.. வலுவான நிலையில் இலங்கை அணி!

பாகிஸ்தானை திணறடித்த இலங்கை பந்துவீச்சாளர்கள்.. வலுவான நிலையில் இலங்கை அணி!


Pakistan all out for 231 in second odi against srilanka

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கிய 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 10 விக்கெட் இழப்பிற்கு 378 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சண்டிமல் அதிகபட்சமாக 80 ரன்கள் எடுத்தார்.

அதனைத் தொடர்ந்து பேட்டிங்கை தொடர்ந்த பாகிஸ்தான் அணி நேற்று 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது. முதல் போட்டியில் அபாரமாக விளையாடி சதமடித்த பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் அப்துல்லா சாபிக் இந்த முறை டக் அவுட் ஆகி வெளியேறினார்.

Srilanka vs pakistan

பாகிஸ்தான் அணியின் அகன் சல்மான் மட்டும் 62 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் இலங்கை பந்து வீச்சாளர்களின் சுழலில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இன்று துவங்கிய 3வது நாள் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 231 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Srilanka vs pakistan

இலங்கை அணிக்காக சிறப்பாக பந்துவீசிய சுழற்பந்துவீச்சாளர் ரமேஷ் மென்டிஸ் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வேகப்பந்து வீச்சாளர் ஜெயசூர்யா 3 விக்கெட்டுகளையும் பெர்னாண்டோ மற்றும் தனஞ்சய தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸ் முடிவில் இலங்கை அணி 147 ரன்கள் முன்னிலையில் உள்ளது.