நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலரில் இதை கவனித்தீர்களா?
மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துவரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. ஹிந்தியில் நடிகர் அமிதாப்பச்சன் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற பிங்க் என்ற படத்தின் தமிழ் ரீமேக்குத்தான் நேர்கொண்ட பார்வை.
படத்தின் ட்ரைலர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டும் இல்லாமல் வெளியான 12 நிமிடங்களில் 100k லைக்ஸ் பெற்று கெத்து காட்டியது படத்தின் ட்ரைலர்.
இந்நிலையில் படத்தின் ட்ரைலரில் மறைந்த நடிகை ஸ்ரீ தேவிக்கு மரியாதை செலுத்தப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ட்ரைலர் ஆரம்பமாவதற்கு முன்பே நடிகை ஸ்ரீ தேவியின் புகைப்படம் காண்பிக்கப்பட்டு அதில் நீங்கா நினைவுகளுடன் என நடிகை ஸ்ரீ தேவிக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.