எனது வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நீ தான் காரணம்.! புகைப்படத்தை வெளியிட்ட நடராஜன்!

நடராஜன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


natarajan-shared-his-daughter-photo


சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த த.நடராஜன் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி அனைவரின் பாராட்டுதல்களுக்கும் உரியவரானார்.நடராஜன் கடந்த ஐ.பி.எல் சீசினில் பல விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து நடராஜன் ஐபிஎல்லுக்கு பிறகு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இந்திய அணி வெற்றி பெற பெரும்பங்கு வகித்தார். 

இதனையடுத்து டெஸ்ட் தொடரிலும் பிரமாதப்படுத்தி ஒரே தொடரில் அனைத்து வடிவங்களிலும் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெயரையும் எடுத்தார். இதனையடுத்து நடராஜனுக்கு இந்திய அளவில் ஏரளமான ரசிகர்கள் பெருகினர். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு சொந்த ஊருக்கு வந்த நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பிய நடராஜன் சமீபத்தில், பழனி தைப்பூச விழாவில் முருகப் பெருமானைத் தரிசிக்க நண்பர்களுடன் சென்று, நேர்த்திக் கடனாக முடிக் காணிக்கை செலுத்தினார். இந்த நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தை ஹன்விகாவுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில், எங்கள் சிறிய தேவதை ஹன்விகா. எங்கள் வாழ்க்கையின் மிக அழகான குட்டி தேவதை. எங்கள் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நீங்கள் தான் காரணம். எங்களை உன்னுடைய பெற்றோராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. நாங்கள் எப்போதும் என்றென்றும் உங்களை நேசிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.