கிராமத்தில் சில்லி சிக்கன் கடை நடத்தும் தமிழக வீரர் நடராஜனின் பெற்றோர்.! மகனின் வளர்ச்சிக்கு என்ன காரணம்.?

கிராமத்தில் சில்லி சிக்கன் கடை நடத்தும் தமிழக வீரர் நடராஜனின் பெற்றோர்.! மகனின் வளர்ச்சிக்கு என்ன காரணம்.?


natarajan-parents-talk-about-their-son

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி-20 போட்டியில் தனது யார்க்கர் பந்து வீச்சின் மூலம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தார் தமிழக வீரர் நடராஜன். குடும்ப வறுமையிலும் தனது கிரிக்கெட் ஆர்வத்தால் இந்த இடத்தை பிடித்துள்ளார் அவர். சாதாரண குடும்ப பின்னணி கொண்ட நடராஜனின் பெற்றோர் இன்றும் தங்கள் கிராமத்தில் சில்லி சிக்கன் கடை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த சின்னப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். ஐபிஎல்அணியில் நடராஜன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடிய பின்னர், கிராமத்தில் புதிதாக வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டில் அவரது தாய் சாந்தா, அப்பா தங்கராஜ், தம்பி சக்தி, தங்கைகள் திலகவதி, தமிழரசி, மேகலா ஆகியோர் வசித்து வருகின்றனர்.

natarajan

ஆரம்பத்தில் நடராஜனின் பெற்றோர் நெசவுத் தொழிலுக்கு சென்று வந்ததுடன், வீட்டின் முன்புறம் 10-க்கு 10 அளவில் மாலையில் சில்லி சிக்கன் கடையை நடத்தி வருகின்றனர். நடராஜனின் கிரிக்கெட் ஆர்வம் தொடர்பாக அவரது பெற்றோர் கூறுகையில், சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மீது நடராஜனுக்கு ஆர்வம் அதிகம். ஜெயப்பிரகாஷ் என்பவர் தான் நடராஜனின் கிரிக்கெட் ஆர்வத்தை புரிந்து கொண்டு பயிற்சி அளித்தார்.

ஜெயப்பிரகாஷின் முயற்சியில், ரஞ்சி, டிஎன்பிஎல் என விளையாடி, ஐபிஎல்., போட்டிக்கு நடராஜன் தேர்வு பெற்றார். இப்போது, இந்திய அணிக்காக விளையாடுவது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என நடராஜனின் பெற்றோர் தெரிவித்தனர்.