விளையாட்டு

ரெய்னா இடத்தில் இவர்தான் விளையாடுகிறாரா..வெளியான புதிய தகவல்.!

Summary:

Murali vijay will play for replacing of rainas places

இந்தியாவில் கொரோன வைரஸின் கோரத்தாண்டவம் ஏற்பட்டதை அடுத்து இந்த வருடம் நடைப்பெற இருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19 ஆம் தேதியன்று நடைப்பெறவுள்ளது. இதற்காக கடுமையான பயிற்சிகளை அனைத்து அணி வீரர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி ஆகிய இரண்டு அணிகளும் மோதவுள்ளன. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த பிரச்சனைக்காக விலகுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் ரெய்னா அறிவித்திருந்தார்.

இதனால் துணை கேப்டன் ரெய்னாவின் இடத்தில் யார் வர போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து வந்த நிலையில் தற்போது ரெய்னாவின் இடத்தில் முரளி விஜயை களமிறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, மேலும் முரளி விஜய் மிகவும் சிறப்பாக சுழற்பந்துவீச்சாளர்களை விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement