BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
சென்னை மெரினா கடற்கரையில் மக்களோடு மகளாக தோனி!. வைரலாகும் வீடியோ!.
மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் வீரர் என்பதையும் தாண்டி, தனது நற்பண்புகளால் ரசிகர்களை அவ்வப்போது கவர்ந்து வருகிறார். தோனிக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி தன் மகள் ஷிவாவுடன் டான்ஸ் ஆடும் வீடியோக்களையும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வைரல் ஆகி வந்தது.
இந்த நிலையில் தோனி தன் மகள் ஷிவாவுடன் சென்னை கடற்கரைக்குச் சென்றபோது கடல் அலையைப் பார்த்து தோனியின் மகள் ஷிவா பயந்து ஓடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா சிமெண்ட்ஸ் துணைத்தலைவர் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் சென்னை வந்தார் மகேந்திர சிங் தோனி.
அடிக்கடி சென்னைக்கு வந்துகொண்டிருக்கும் தோனி, இந்த முறை வந்தபோது மனைவி மற்றும் மகளுடன் சென்னை கடற்கரைக்குச் சென்றுள்ளார். அங்கு பொதுமக்கள் மத்தியில் மகள் ஷிவாவுடன் கடற்கரையில் ஜாலியாக விளையாடியுள்ளார்.