தல தோனி சார்.. நீங்க ஜெயிக்காவிட்டாலும் பரவாயில்லை அடிக்காவிட்டாலும் பரவாயில்லை! இதை மட்டும் செய்யுங்கள்.! தோனியின் தீவிர ரசிகர்கள்!ms Dhoni fans request to msd

மகேந்திர சிங் தோனி அவர்களுக்கு இந்திய அளவில் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். இந்திய அணியில் இருந்து தோனி ஓய்வு அறிவித்தது பல கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக தோனி செயல்படுவார் என்ற செய்தி வெளியானதிலிருந்து ரசிகர்கள் பயங்கர குஷியில் இருந்தனர். 

 ஐபிஎல் என்றாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் நெஞ்சை நிமிர்த்து சிங்கம்போல் ஆடுகளத்தில் கர்ஜித்து அனைத்து வீரர்களும் பந்துகளை பறக்க விடுவார்கள். அந்தவகையில் இந்த வருடம் ஐபிஎல் போட்டியின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. அந்தப் போட்டியிலும் வழக்கம்போல கடைசி ஓவரில் சிறப்பாக அடித்து வெற்றி பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை குஷிப்படுத்தியது சென்னை அணி. 

MS Dhoni

 ஆனால் அதன் பிறகு நடந்த தொடர்ந்து மூன்று போட்டிகளில் படுதோல்வி அடைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதிலும் கடைசி போட்டியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் விளையாடியதில் கடைசி  ஓவரில் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி சென்னை அணியை வீழ்த்தியது. ஆனால் அந்த கடைசி ஓவரில் தோனி நின்றதால் எப்படியாவது சென்னை அணி ஜெயித்து விடும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். அதன் பிறகு தோனியும் சென்னை அணியின் சொதப்பல்களை ஒப்புக்கொண்டார். 

 சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்திய அளவில் அதிகப்படியான ரசிகர்கள் இருப்பதற்கு காரணம், அந்த அணியின் தலைவர் தல தோனி என்பதாலேயே என்று கூறலாம். தொடர்ந்து மூன்று போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி பெற்றாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோனி ரசிகர்கள், நீங்கள் ஜெயிக்காவிட்டாலும் பரவாயில்லை அடிக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் மைதானத்தில் வந்து எங்களுக்கு உங்களுடைய தரிசனத்தை கொடுத்தாலே அதுவே எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுக்கின்றது என இணையத்தில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.